மார்க்கம் பகுதியில் பாதசாரி ஒருவருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்திய விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மார்க்கம் பகுதியில் சாரதி ஒருவர் பாதுசாரி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 53 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி மார்க்கம் மற்றும் கோல்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலை ஏழு மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக யோர்க் பிராந்திய தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.
விபத்தை மேற்கொண்ட சாரதி சம்பவ இடத்தில் இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் சாட்சியங்கள் திரட்டப்படுவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள்>ஒன்றாரியோவில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!