சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய ஜனாதிபதி,
எதிர்க்கட்சிக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அது ஒரு பிரச்சனை இல்லை. பொதுவாக, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை புகழ்ந்து பேசுவதில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு அப்பால் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ அதிகாரம் இல்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் திறன் அரசாங்கத்திற்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ இல்லை.
அப்படிச் செய்தால் மீண்டும் இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் உருவாகும்.
தற்போது இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிடத் தயாராக வேண்டும் என ரணில் தெரிவித்துள்ளாhர்