Tuesday, December 24, 2024
Homeவிளையாட்டுபாகிஸ்தான்- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தும் ; பாகிஸ்தான் தோல்வி:

பாகிஸ்தான்- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தும் ; பாகிஸ்தான் தோல்வி:

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் 7-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இதனால் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட்டில் தோல்வியடைந்ததன் மூலம் 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி மோசனமான சாதனையை படைத்துள்ளது. ஒரு அணி முதல் இன்னிங்சில் 500 ரன்கள் மேல் குவித்து தோல்வியடைந்த முதல் அணி பாகிஸ்தான் ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments