கனேடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அமைச்சரவையிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ப்ரீலாண்ட் மத்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியை ராஜினாமா செய்வது தொடர்பில் ப்ரீலாண்ட்ன் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் ரொறன்ரோ தொகுதியில் மீண்டும் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
லிபரல் அரசாங்கம் மற்றும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ப்ரீலாண்ட் பதவி விலகுவது அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்>கனடாவில் கொல்லப்பட்ட இந்தியருக்கு சக ஊழியர்கள் இறுதி அஞ்சலி