கனடாவில் பாதுகாவலராக பணிக்கு சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், அவரது சக பாதுகாவலர்கள் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க இறுதி மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவிலிருந்து ஒன்றரையாண்டுகளுக்கு முன் கனடாவுக்கு; 20 வயதுடைய ஹர்ஷன்தீப் சிங் வந்து சேர்ந்துள்ளார்
சிங் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டனில் பாதுகாவலராக பணிக்கு சேர்ந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், இம்மாதம், அதாவது, இம் மாதம் 6ஆம் திகதி அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாக நுஎயn ஊhயளந சுயin, (30) மற்றும் துரனiவா ளுயரடவநயரஒ (30) என்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், பணியில் சேர்ந்து மூன்று நாட்களே ஆன நிலையில் கொல்லப்பட்ட சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், சிங்குக்கு கௌரவம் செலுத்தும் வகையில், அவரது சக பாதுகாவலர்களும், அவசர உதவிக்குழுவினரும் இணைந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
250க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில், பேண்டு வாத்தியம் முழங்க சிங்குக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டதைக் காட்டும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.