ஒரு நம்பிக்கை கீற்று
இலங்கையில் தற்போது உருவாகியுள்ள சமூக அரசியல் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்
சமூக மட்டத்தில் ஜனநாயக இடைவெளி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது .
மறைந்த தமது பிள்ளைகளை நினைவு கூரும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த வீதிகள் நிலங்களை மக்களிடம் ஒப்படைக்கும் காரியங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன .
இன மத வாதத்துடன்எவ்வித சமரசமும் இல்லை என ஜனாதிபதி பிரதமர் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தோழர்களால் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படுகிறது .
நாட்டின் நிர்வாக இயந்திரத்தில் பன் முகத்தன்மையை உறுதிப்படுத்தும் வேலைகள் நடைபெறுகின்றன அதிகார தோரணைக்கு பதிலாக சேவைத் துறை என்ற பண்பு மாற்றத்திற்கு வலியுறுத்தப்படுகிறது
பிரமுக தனங்கள் மாலை மரியாதை தாரை தப்பட்டைகள் இடமில்லை என்ற சமிக்ஞை ஜனாதிபதி மட்டத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது
அரிசி முட்டை காய்கறி இதர அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பதுக்கல்கள் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன .
தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்கள் மக்களிடம் பெற்ற ஆணை அதனை தாம்மீற முடியாது என ஆட்சியளர்களான தோழர்களால் தெளிவாக கூறித்துரைக்கப்பட்டுள்ளது
அரசு நிர்வாக இயந்திரம் மக்களுக்கு நெருக்கமாக இருப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையின் பல கலாச்சாரம் பன்மை துவம் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
அகங்காரம் இறுகிய கெடுபிடிமுகம் கொண்ட அரசுக்கு பதிலாக மக்கள் முகம் கொண்ட அரசு நிறுவப்பட்டிருக்கிறது
வாராது வந்துற்ற இந்த ஆட்சியில் குறைபாடுகள் இல்லை என்று இல்லை.
ஆனால் ஆனால் இதனை பாதுகாத்து முன் கொண்டு செல்ல பங்களிக்க வேண்டியது எமது கடமை
ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் சமூக நீதி மறுக்கப்பட்ட மக்கள் பால் சமத்துவம் என்று உயரிய கொள்கைகளைக் கொண்ட அரசு என்பதை மனம் கொண்டு செயல்பட வேண்டும்
தெற்கில் இருந்ததைப் போலவே இன்றைய பாரம்பரிய தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் எவ்வளவு கெடுபிடி பகட்டுஅகங்காரம் பொய் புரட்டு ஊழல் மயமானவை என்பதையும்
தாம் காலம் காலமாக அனுபவித்து பிரபுத்துவ அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு இந்த தீய சக்திகள் அலைந்து கொண்டிருக்கின்றன. மக்கள் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய தருணம்.
கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை சமூக பொருளாதார ழ்ச்சியையும் எழுச்சியையும் இலங்கையின் பன்முகப் பாங்கையும் உறுதிப்படுத்துவதற்கான நீண்ட பயணம் இந்த பயணம் தொடர வேண்டும் இந்த வரலாற்றுச் சக்கரங்களை பின்னோக்கி இழுக்கும் சதிநாசலைகள்வேலைகள் தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்
நாடு சரியான திசை வழியில் செல்வதற்கு எம்மாலான முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.