தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு விடுத்த விசேட உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை அகற்றவும் இந்த சட்டம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூன் சுக் யோலின் மக்கள் அதிகாரக் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்ட சட்ட மூலத்தில் தொடர்ந்து உடன்படாத நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த சட்ட அமுலாக்கத்தின் ஊடாக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்>ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் கொடிய வைரஸ்- மக்களை எச்சரிக்கும் W.H.O!