உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் , 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் , 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் , இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்இ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் , பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பதவியிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய, நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவர் நாமல்!