பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த ஆய்வாளரான ஹின்டோன் இம்முறை நோபல் பரிசு வென்றார்.
இயந்திர கற்கை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விடயங்களை இயற்பியல் ஊடாக ஆய்வுக்கு உட்படுத்தியமை காரணமாக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
இன்றைய தினம் காலை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹின்டோனுடன் இணைந்து பிரின்ட்சொன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜோன் ஹாப் ஃபீல்டுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹின்டோன் மற்றும் ஹாப்பீல்ட் ஆகியோர் இயந்திரக் கற்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நரம்பியல் வலை அமைப்பு ஆகிய தொடர்பான முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளி விபர இயற்பியல் எண்ணக் கருக்கலை பயன்படுத்தி இந்த இருவரும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நமது அன்றாட வாழ்வியல் விடயங்களுக்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இந்த ஆய்வு மூலம் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.