Friday, December 27, 2024
Homeஇந்தியாஅண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார் - திருமாவளவன்

அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார் – திருமாவளவன்

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை (27) காலை 10 மணிக்கு அவரது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும்.
ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது’ என அவர்அறிவித்துள்ளார்.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

அப்போது, அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பதில் கூறிய திருமாவளவன் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் வேதனைக்குரியது.

ஞானசேகரன் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குற்றவாளி கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது.

குற்றவாளிக்கு பிணை வழங்கக்கூடாது.

குற்ற பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார்.

அதிமுக எதிர்க்கட்சி இல்லை.

பாஜக தான் எதிர்க்கட்சி என காட்ட நினைக்கிறார்.

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலை ஏன் இப்படி ஆனார் என தெரியவில்லை.

அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிட கூடாது என தொல் திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்>வவுணதீவு,சிப்பிமடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments