Wednesday, December 25, 2024
Homeஉள்ளூர்யாழ். தென்மராட்சியில் மண் அகழ்வு இடம்பெறும் இடங்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்

யாழ். தென்மராட்சியில் மண் அகழ்வு இடம்பெறும் இடங்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதி மற்றும் விவசாய நிலங்களில் மண் அகழ்வு இடம்பெற்றுவரும் இடங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பார்வையிட்டார்.

கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை – கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதி மற்றும் விளை நிலங்களில் அண்மைக் காலமாக சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெற்றுவருகிறது.

இதனைக் கண்டித்து பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்றுவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், சாவகச்சேரி பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம், கரம்பகம் கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மண் அகழ்வு இடம் பெற்றுள்ள இடங்களை பார்வையிட்டுள்ளனர்

இதையும் படியுங்கள்>தமிழக மீனவர்கள் 17 பேருக்கும் விளக்கமறியல்!

https://www.youtube.com/shorts/wO8Hi8hoA5Y?feature=share

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments