Monday, December 15, 2025
spot_img
Homeவிளையாட்டுஅறிமுக போட்டியில் ஹர்ஸித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை

அறிமுக போட்டியில் ஹர்ஸித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது

இப்போட்டிக்கான இந்திய அணியில் யஸ்ஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஸஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகினர்.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் ஜோடி அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன் பார்ட்னரச்ஷிப் அமைத்தது.
இறுதியில், இங்கிலாந்து அணி 248 ஓட்டங்களில் ஆல் அவுட் ஆனது.

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஸித் ராணா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில், மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ஹர்ஸித் ராணா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அறிமுகம் ஆன ஹர்ஸித் ராணா, முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்தார்.

சமீபத்தில் புனேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான ஹர்ஸித் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதேபோல், நேற்று நடந்த நாக்பூர் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன ஹர்ஸித் ராணா, 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!