லஞ்சமாக பெற்ற பணத்தை மஹிந்தவுக்கு கொடுத்த கபில சந்திரசேன..!

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, தலா 20 மில்லியன் ரூபாய் வீதம் மூன்று தடவைகளாக மொத்தம் 60 மில்லியன் ரூபாவை பெலியத்த இல்லம் மற்றும் கார்டன் இல்லத்தில் வைத்து மகிந்த ராஜபக்சவிடம் வழங்கியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த வாக்குமூலம் குறித்து பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிசாந்த தயாநந்த கருத்து தெரிவிக்கையில்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் குறித்த வழக்கின் பிரமாண பத்திரத்தை கையளித்திருந்தார்கள்.

அவரை கைது செய்ததோ அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதோ சம்பந்தமாக எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவரிடம் மேற்கொள்ள விசாரணை முறை தொடர்பில் பிரச்சனை இருக்கிறது.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் என்னிடம் இதில் சம்பந்தப்ட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை கூற சொல்லி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தியதால் ஏற்பட்ட மரண பயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, என் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதாக அவர் பிராண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

நான் யார் என்று தெரியுமா என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இவரை மிரட்டியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிபதியிடம் தெரிவித்தார்.

அவரை மிக மோசமாக அச்சுறுத்தி அவரிடம் இருந்து வாக்குமூலங்களை பெற்றிருக்கிறார்கள்.எதிர்காலத்தில் பல அரசியல்வாதிகளின் பெயர்கள் இதனுடாக வெளிவரும். காரணம் இவருக்கு மரண பயத்தை காட்டி இவரிடம் இரு பெயர்களை சொல்ல வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp