Monday, December 15, 2025
spot_img
Homeஉள்ளூர்யாழ்ப்பாணத்தில்; திருமணமாகி ஒரு மாதத்தில் விதவையான மனைவி

யாழ்ப்பாணத்தில்; திருமணமாகி ஒரு மாதத்தில் விதவையான மனைவி

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கு கடந்த 09.04.2025 அன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதிகள் இருவரும் கடந்த சனிக்கிழமை (10-05) உறவனர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திருமண விருந்து உண்டுவிட்டு வீடு வந்தவேளை வாந்தி ஏற்பட்டது. இந்நிலையில் வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றும் வாந்தி குணமாகவில்லை.

பின்னர் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!