ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
கமல்ஹாசனுடன் ஆளவந்தான் என்ற படத்தில் நடித்தவர் ரவீனா டாண்டன்.
தொடர்ந்து இந்தி மொழியில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார்.
சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ரவீனா டாண்டன் திருமணமாகி தற்பொழுது மும்பையில் வசித்து வருகிறார்.
அவருக்கு ராஷா ததானி என்ற மகள் இருக்கிறார்.
இவரும் திரை உலகில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார்.
ராஷா ததானியும் தமன்னாவும் மிக நெருங்கிய தோழிகள். அவரது வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியிலும் தமன்னா தவறாமல் பங்கேற்று வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு ராஷா ததானி வீட்டில் நடந்த ஹோலி பண்டிகையில் தமன்னா பங்கேற்று மகிழ்ச்சியாக ஹோலியை கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் அவரது முன்னாள் காதலரான விஜய் வர்மாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஷா ததானியின் 20வது பிறந்த நாள் விழா நேற்று மாலை மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
விழாவில் பங்கேற்பதற்காக தமன்னா, ரவீனா டாண்டன், இப்ராகிம் அலிகான், மனிஷ் மல்கோத்ரா, ஆமன் தேவ்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்க வந்த தமன்னா ஆடை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திழுத்தது.
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கருப்பு நிற பாடிகான் உடையில் அவரது அழகான நடை, அங்கு குவிந்து இருந்த மொத்த கேமரா கண்களிலும் பளிச்சென மின்ன தொடங்கியது.