அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, இலங்கைக்கு 44 சதவீத வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார் .
அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்திந்தன.
இந்நிலையில், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு கூ60க்கும் கீழே சரிந்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது.
டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு முறை பொருளாதார நடவடிக்கைகளில் மந்தநிலைக்கு வழிவகுத்து, இறுதியில் எண்ணெய் தேவையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது