Video Player
00:00
00:00
அமரர் மாணிக்கம் பாக்கியம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி நாளை (16.01.2025) நடைபெறுகின்றது.
கச்சாய் தெற்கு, கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்.
Video Player
00:00
00:00
Podcast: Play in new window | Download
அமரர் மாணிக்கம் பாக்கியம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி நாளை (16.01.2025) நடைபெறுகின்றது.
கச்சாய் தெற்கு, கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்.
Podcast: Play in new window | Download
அம்மம்மாவே உங்கள் துயரம் என்றும் மாறாது ,ஆறாது என்றும் உங்கள் நினைவுடன்
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆத்மசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
RIP
8th Rememberance day. My condolences
நினைவஞ்சல்லியுடன்
ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துகொள்ளுகின்றேன்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
rip
அன்னை மொழியேஅழகின் உருவேஅன்பின் வடிவே எங்கள் மூச்சே… காலன் கவர்ந்து சென்று வருடங்கள் எட்டு ஆனதோ , ஈரம் காயாத விழிகள் இன்னும் தேடுதே அருகில் அம்மம்மா நீங்கள் வேண்டும் என்ற ஆறாத ஆசையோடு
தாயை இழந்த பிள்ளைகள் அருகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் அனாதையாகவே உணர்வார்கள். ஏனெனில் தாய்க்கு நிகர் இவ்வுலகில் யாருமில்லை. அந்த இடத்தை நிரப்ப எவராலும் முடியாது.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஓம் சாந்தி
நின் நினைவில் நாளும் பொழுதும்
வாழ்வோம் குஞ்சம்மா
கோயிலாய் எம்முள்ளமெல்லாம்
கொண்டே தெய்வமாய்
வீற்றருள் புரிவாயம்மா
உம் ஆத்ம சாந்திக்காய்
ஆண்டாண்டு காலமும் தவறாது
பிராத்தித்து நிற்போம்..
சாந்தி.. சாந்தி.. சாந்தி..
நீங்கள் கற்றுத்தந்த வாழ்க்கைப் பாடம்
சென்ற இடமெல்லாம் எம்மை சிறக்கச் செய்கின்றது அம்மம்மா
உங்களின் கனிவான குணமும், கள்ளமில்லாக் குணமும்
காற்றோடு கலந்தாலும் எம்மை கண்ணீர் மல்கச் செய்கின்றது..
ஆண்டு எட்டு பறந்தோடிப் போனாலும்
பரிவான பாசத்திற்கு ஏங்கி நிற்கின்றோம்..
வார்த்தைகளில் அடங்கா காவியம் நீங்கள்
குடும்பத்தின் ஆலமரமாகிய உங்களிடம்
பிள்ளைகள் நாம் ஆசி வேண்டி நிற்கின்றோம்.!
Rip Ammamma
வெந்துயரில் நாம் மூழ்கி
வேதனையில் வெந்து துவண்டு
வெம்பி மனம் புண்ணாகி நிற்கின்றோம்
எம் தாயே அம்மா
ஆயிரம் பேர் அன்பு சொரிந்தாலும்
நின் தாயன்பிற்கு இணையாகுமா அம்மா
இனி எமக்கார் துணையோ வையகத்தில்.!தாயே எம் அம்மா
தாயாக வந்தெம்மைத்
தாங்கிக் கருத்தரித்து
மைந்தராய் எம்மை ஈன்று
பாலூட்டி – சீராட்டி
நோயேதும் தீண்டாது
நுணுகி எமைக் காத்து
ஆளாகி நாம் எழவே
ஆயிரமாம் தொல்லைகளை
நீ சுமந்து நின்றாயே
நாம் அதற்குப் பரிசாக
எதைத் தந்தோம் என் செய்தோம்
எம் நெஞ்சம் வேகிறதே..