Sunday, December 14, 2025
spot_img
Homeமுக்கிய செய்திகள்ரஸ்ய இராணுவத்தில் விரும்பி இணைந்து கொண்ட இலங்கையர்களில் 56 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்- வெளிவிவகார அமைச்சர்

ரஸ்ய இராணுவத்தில் விரும்பி இணைந்து கொண்ட இலங்கையர்களில் 56 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்- வெளிவிவகார அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு ரஸ்ய தூதரக தகவல்களை அடிப்படையாக கொண்டு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை பணியகம் போன்றவற்றிற்கு கிடைத்துள்ள தகவல்களின்படி உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்காக 554 இலங்கையர்களை ரஸ்யா சேர்த்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள விஜித ஹேரத் எவரையும் ரஸ்யா பலவந்தமாக சேர்த்துக்கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

2025 ஜனவரி 20 ம் திகதி வரை 59 இலங்கையர்கள் ரஸ்ய உக்ரைன் போர்முனையில் கொல்லப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள அமைச்சர் இவர்கள் குறித்த விபரங்கள் என்னிடம் உள்ளன இவற்றை நாடாளுன்ற ஹன்சார்ட்டில் சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!