Sunday, December 14, 2025
spot_img
Homeமுக்கிய செய்திகள்யாழ். சட்டவிரோத தையிட்டி விகாரையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

யாழ். சட்டவிரோத தையிட்டி விகாரையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் நாளை புதன்கிழமை (12) மாலை 6 மணி வரை தொடரும் என கூறப்படுகிறது.

இப்போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகையில்,

இப்போராட்டத்துக்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்டத்துக்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!