Friday, December 5, 2025
spot_img
Homeஉள்ளூர்நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்திற்குத் நிரந்தர வைஸ் சான்ஸலர் (ஏiஉந ஊhயnஉநடடழச) நியமிக்கப்படாதது உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாகவே இவ்வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஒரு எச்சரிக்கை வேலைநிறுத்தமாக தொடங்கிய இந்த போராட்டம், நேற்று (3-11) நான்காவது நாளாக தொடர்ந்தது.

சங்கத் தலைவர் பேராசிரியர் நளக கீகியானாகே தெரிவித்ததாவது, ‘இந்த பிரச்சினைக்கான தீர்வுகளை அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும்.
கடந்த ஒரு ஆண்டாக பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர வைஸ் சான்ஸலர் இல்லாதது பெரும் நிர்வாக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட நியமன பரிந்துரைகள் எந்த காரணமும் கூறாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன,’ என அவர் குறிப்பிட்டார்.

‘பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் இந்த நெருக்கடியும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் தலையீடும் எதிர்க்கும் வகையில் நாங்கள் இந்த வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தோம்.
எங்களின் முதன்மை கோரிக்கை – வைஸ் சான்ஸலர் பதவிக்கு ஏற்கனவே முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதே.
அந்த நியமனம் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,’ என அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது, எதிர்காலத்தில் உள்ளூர் சமூகத்தையும் இணைத்து இந்த வேலைநிறுத்தத்தை மேலும் வலுப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!