WhatsApp மூலம் பணம் கோரும் மோசடி சம்பவங்கள் அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் இதுபோன்ற மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பெருமளவில் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி குறிப்பிட்டுள்ளார்.
WhatsApp குழுக்கள் வழியாக செயல்படும் மோசடி வலைகளுக்கு பலர் சிக்கி வருகின்றனர் என்பதையும், பொதுமக்கள் இத்தகைய குழுக்களில் செயல்படும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்கள் வழியாக பணம் அல்லது தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்பட்டால் அவை உண்மையானவை என நம்பி உடனடியாக பதிலளிக்காமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

