இலங்கை ஏதிலிகளுக்கு தமிழக அரசு வழங்கிய அடையாள அட்டையை வாகனப் பதிவுக்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் ஏதிலிகள் வைத்திருக்கும் அடையாள அட்டைகளை மோட்டார் வாகனப் பதிவுக்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்வதென்று, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையாளர், பிராந்திய போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, வாகனப் பதிவு செய்வதற்கான செல்லுபடியாகும் ஆவணமாக தமிழக அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்கும் இலங்கைத் தமிழர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.