உலக பாரம்பரியச் சின்னமான சிகிரியாவின் கண்ணாடிச் சுவரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண் ஒருவரை சிகிரியா பொலிஸார் நேற்று (14-09) கைது செய்தனர்.
பொலிஸார் தெரிவித்ததாவது, கைது செய்யப்பட்டவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஆவார். அவர், இன்னும் சிலரோடு சிகிரியாவிற்கு சென்றபோது இச்செயலை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

