கனடாவின் தேசிய கராத்தே சம்மேளனமான கராத்தே கனடாவின் ஏற்பாட்டில் புதன்கிழமை (02) நடாத்தப்பட்ட கராத்தே மத்தியஸ்தர் மற்றும் நடுவர் தேர்வில் இலங்கை தமிழரான சென்செய்.எஸ்.மனோகரன் காட்டா யு தர மத்தியஸ்தர் தரத்தில் சித்தி பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து வியாழக்கிழமை (03) முதல் ஞாயிற்றுக்கிழமை (06) வரை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் நகரில் இடம்பெறவுள்ள தேசிய கராத்தே சுற்றுப்போட்டிகளிலும் இவர் கடமையாற்ற உள்ளார்.
மேலும், எதிர்வரும் பான் அமெரிக்கன் கராத்தே மத்தியஸ்தர் மற்றும் நடுவர் தேர்வில் பங்கெடுக்கும் தகுதியினையும் பெற்றுள்ளார்.
கோல்டன் கராத்தே தோ மார்ஷல் ஆர்ட்ஸ் ஓர்கனைசன் பிரதம பயிற்றுநரும்,சோட்டாகான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனலின் கனடா பிரதிநிதியுமான சென்செய்.எஸ்.மனோகரன் ஸ்ரீலங்கா தேசிய கராத்தே தெரிவுக்குழு தலைவரும், சர்வதேச கராத்தே ஆசிரியருமான சென்செய்.அன்ரோ டினேஷ் இடம் நேரடியாக பயிற்சிகளை பெற்று உயர்தர டான் டிப்ளோமா தரங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>உள்ளூராட்சி சபைத் தேர்தல் விதிமீறல் தொடர்பில் 456 முறைப்பாடுகள்
https://www.youtube.com/@pathivunews/videos