அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரிகளை விதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் கோடீஸ்வரர் எலான் மஸ்க் இருவருக்கும் எதிராக அமெரிக்கா முழுவதும் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹான்ட்ஸ் ஆப் என்ற எதிர்ப்பு பேரணி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பேரணியில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களும், உள்ளூர் ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற மிகப் பெரிய பேராட்டங்களில் இதுவும் ஒன்று.
இது அமெரிக்கர்களிடையே அதிகரித்து வரும் விரக்தியைக் குறிக்கிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படியுங்கள்>அமெரிக்கா ரஷியாவின் பெயரை கூட உச்சரிக்க பயப்படுகின்றது – உக்ரைன் ஜனாதிபதி