Thursday, April 24, 2025
spot_img
Homeஇந்தியாஇந்திய பிரதமரின் பணிப்புரைக்கமைய தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய பிரதமரின் பணிப்புரைக்கமைய தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ஆம் திகதி இலங்கை வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் மோடி கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இலங்கை ஜனாதிபதியின் சந்திப்புக்குப்பின் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதம் நடத்தியதாக தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

சரவணபவ குருக்கள் on சாவு அறிவித்தல்!
சபரீச சர்மா on சாவு அறிவித்தல்!
நிர்மலாதேவி on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
கிழக்கின் குரல் on 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
What do you like about this page?

0 / 400