இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று (14-09) பிற்பகல் 4.41 மணியளவில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நடுக்கம் வடபெங்காலிலும் அண்டை நாட்டான பூட்டானிலும் உணரப்பட்டது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, நிலநடுக்கத்தின் மையம் குவாஹத்தியில் உள்ள உடல்குரி மாவட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிலோமீட்டர் எனக் கூறப்பட்டது.
நேற்று மாலை வரை உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் தொடர்பான தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர், செப்டம்பர் 2 ஆம் திகதி அசாமின் சோனிட்பூர் பகுதியில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

